தென்காசி மாவட்டம் கடையம் அருகே மயிலபுரம் பகுதியில் முருகன் (68) என்பவர் வசித்து வருகிறார். இவர் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஒரு 12 வயதுடைய 7-ம் வகுப்பு மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனால் மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து டியூஷனுக்கு செல்லும்போது சக மாணவிகளிடம் மாணவி கூறியுள்ளார். இந்த தகவல் சிறுமியின் பெற்றோருக்கும் தெரிய வந்த நிலையில் அவர்கள் ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரின் படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.