இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மக்களுக்கு அரசு தொடர்ந்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதன்படி தற்போது பகுதி நேர ஆன்லைன் வேலை என்று கூறி சென்னையை சேர்ந்த it பெண் ஊழியரிடம் 66 லட்சம் ரூபாய் மோசடி செய்த UP ஐ சேர்ந்த கல்லூரி மாணவர் ரிதம் சல்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரின் வங்கி கணக்கில் இருந்த 19 லட்சத்தை போலீசார் முடக்கியுள்ளனர். இவர் ஆன்லைன் மோசடியில் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே தொடரும் ஆன்லைன் மோசடியால் மக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.