செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,  நாங்குநேரி சம்பவம் ரொம்ப ரொம்ப கொடூரமான செயல்.  பள்ளி மாணவர்கள்….  அவர்கள் படிக்கின்ற வயதிலேயே இவ்வளவு ஜாதியை வன்மத்தோடு செயல்பட முடியும் என்றால் ? தமிழகம் எம்மாதிரி வருங்காலத்தை இந்த மக்களுக்கு கொடுக்கப் போகிறது என்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. கூட படிக்கின்ற அந்த வயசுல தான் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் குழந்தைகள் சகோதரத்துவத்தை உருவாக்க வேண்டிய வயது அது.

அதுல எப்படி இவ்வளவு விஷமாக ஒரு மனிதனுடைய மனது மாதிரி….  ஒரு குழந்தையினுடைய மனது மாறி இருக்கிறது என்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. சமூகநீதி பேசுகின்ற இந்த மாநிலத்திலேயே….  இளம் வயதில் இருக்கக்கூடிய இந்த மாணவச் செல்வங்கள் இம்மாதிரியாக ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுகின்றார்கள்.  அது கலையாக இருக்கலாம் அல்லது அவர்கள் படிக்கின்ற புத்தகமாக இருக்கலாம் அல்லது அவர்களை சுத்தி இருக்கின்ற சமுதாய நபர்களுடைய தாக்கமாக இருக்கலாம். ஆனால் எதுவாக இருந்தாலும்,  தமிழகத்தினுடைய எதிர்காலத்திற்கு இது ஆபத்தானது.

இதை அத்தனை பேரும்…  அரசியல் வேறுபாடு இல்லாமல்,  அத்தனை பேருமே,  இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றார்கள்  என்றால் ? அதற்கான காரணத்தை கண்டறிந்து,  ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும். ஆனால் இன்னொரு நேரத்திலே சமூகநீதி பேசுகின்ற மண்,  இது பெரியார் மண்,  இங்குதான் நாங்கள் இந்தியாவிற்கே சமூக நீதியை காட்டுகின்றோம் என்று சொல்லுகின்ற இந்த மாநிலத்தில்,

இவர்களெல்லாம் பேசிக் கொண்டிருந்த இத்தனை சமூக நீதிகளும் இன்று மாணவர்களை கூட அந்த செய்தியை அவர்களால்  கொண்டு போய் சேர்க்க முடியவில்லை என்பது ரொம்ப ரொம்ப மோசமான விஷயமாக நாங்கள் பார்க்கின்றோம். அப்ப நீங்க பேசுறதுக்கும் –  செயல்படுவதற்கும் இருக்கக்கூடிய வித்தியாசத்தில் தான் இன்றைக்கு மாணவர்கள் இந்த செயலில் ஈடுபடுகிறார்கள் என தெரிவித்தார்.