தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டியில் இருந்து வந்த பயணிகள் ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் 70 மது பாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் பி.எஸ் அக்ரஹாரத்தைச் சேர்ந்த ஜெயவேல், ஆட்டோ டிரைவர் கணேசன், செந்தில்குமார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயவேல், கிருஷ்ணன், செந்தில்குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மது பாட்டில் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.