திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கையில் பையுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை சுற்றி வளைத்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 100 கிராம் போதை காளான், 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதனைதடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கொடைக்கானல் பாக்கியபுரத்தை சேர்ந்த ஜெனிபர், ராகுல், அல்காத் என்பது தெரியவந்தது. இவர்கள் சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் 3 பேரையும் கைது செய்து, போதை காளான் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.