கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவானந்தா படிகார்(35). கடந்த மே மாதம் 21 ஆம் தேதி இவருக்கு ஜெயஸ்ரீ(30) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. சிவானந்தா ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் சிவானந்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை அறிந்த ஜெயஸ்ரீ தனது கணவரை கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்தனர்.
சிறிது நேரத்தில் சிவானந்தா ஜெயஸ்ரீயின் பெற்றோரை தொடர்பு கொண்டு உங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறியுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயஸ்ரீயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஜெயஸ்ரீயின் பெற்றோர் சிவானந்தா தங்களது மகளை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
