டெல்லியின் ஓக்லா பகுதியில் உள்ள கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 17ம் தேதி மாலை 4 மணி அளவில் இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில், தனது வீட்டின் மேல் மாடியில் நின்று பட்டம்  பறக்கவிட்டுக் கொண்டிருந்த அந்த சிறுவன், திடீரென தடுப்பு சுவரைத் மீறி நிலைதடுமாறி  கீழே விழுந்துள்ளார். அந்தக் அதிர்ச்சி காட்சி  கட்டிடத்தில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. வீடியோவில், சிறுவன் மேலே இருந்து கீழே விழுந்து தரையில் மோதி விழுவது தெளிவாகப் பார்க்கப்படுகிறது.

“>

 

இந்த சம்பவம் நடந்ததும் அங்கிருந்த மக்கள் ஓடிச் சென்று சிறுவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர் தரையில் விழுந்த தருணத்தில் ஏற்பட்ட தாக்கம் மிக கடுமையாக  இருந்ததால், சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இது தொடர்பாகப் பொது மக்களில் அதிர்ச்சி நிலவுகிறது.