சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் வாய்பிளக்கும் அதிர்ச்சியுடன் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் உள்ளது. இதில், ஒரு வீட்டின் படுக்கையறையின் கூரையில், முழுவதும் கண்ணாடியாக வடிவமைக்கப்பட்ட ஒரு நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
இந்த கண்ணாடி குளத்தில் நீந்துபவர்களை, படுக்கையறையிலிருந்தே தெளிவாகக் காண முடிகிறது. இந்த அபூர்வமான அமைப்பு வீட்டு உள்கட்டிட வடிவமைப்பில் புதுமையை உணர்த்துவதைத் தாண்டி, பிரைவேசியின் எல்லைகள் மீறுவதாகவும் சிலர் விமர்சனம் செய்கின்றனர்.
இந்த கண்ணாடி நீச்சல் குளம், அந்த வீட்டின் மனைவியின் தனிப்பட்ட விருப்பமாகும். “படுக்கையறையின் கூரையில் கண்ணாடி நீச்சல் குளம் வேண்டும்” என்பதற்காக, அவரது கணவர் இது போன்ற வித்தியாசமான ஒரு வடிவமைப்பை செய்து கொடுத்துள்ளார். இந்த வீடியோவை @jrsfurniture22 என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்கள் கிடைத்துள்ளன. வீடியோவில், அந்த மனைவி கண்ணாடி குளத்தில் நீந்தும் காட்சியும் இடம்பெற்றுள்ளது, இது மேலும் மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், நெட்டிசன்கள் மாறுபட்ட கருத்துக்களுடன் இந்த வீடியோவைக் கலாய்த்தும், பாராட்டியும் வருகின்றனர். ஒருவர், “இது காதல் இல்ல சோகம்” என கூற, மற்றொருவர், “பூகம்பம் வந்தா என்ன ஆகும்?” என பதட்டம் தெரிவித்துள்ளார். இன்னொருவர் “கண்ணாடி உடைந்தா, Final Destination மாதிரி ஆகிடும்!” என கலாய்த்துள்ளார். காதலுக்காக எல்லையில்லா கற்பனைகளும் செயலும் எவ்வளவு எக்ஸ்டிரீமுக்கு செல்ல முடியும் என்பதை இந்த வீடியோ காட்டி இருக்கிறது.
