சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் ஒரு நகைச்சுவையான வீடியோ, பார்ப்போர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், பாம்பாட்டி ஒருவர் தனது வழக்கமான புல்லாங்குழல் வாசிப்புடன் நாகப்பாம்பை கட்டுப்படுத்த முயல்கிறார்.
பொதுவாக, புல்லாங்குழல் சத்தத்தை கேட்டு பாம்பு படம் எடுத்து விரித்து நிற்கும் காட்சி எப்போதும் தெரிந்தது. ஆனால் இந்த வீடியோவில், புல்லாங்குழல் கேட்டதும் நாகப்பாம்பு அங்கிருந்து அப்படியே ஓடிவிட்டது. அத்துடன், அந்த பாம்பை பிடிக்க பாம்பாட்டி தன்னம்பிக்கையுடன் ஓடும் காட்சி நெட்டிசன்களின் சிரிப்பை அடக்க முடியாத அளவுக்கு கொண்டுவந்திருக்கிறது.
இந்த வீடியோவில் புல்லாங்குழல் சத்தத்தை கேட்டு படம் விரித்து நின்ற பாம்பு, அடுத்தவேளை அச்சத்துடன் திடீரென ஓடிவிட்டதை பார்க்கலாம். பாம்பாட்டி அதை பிடிக்க முயன்றாலும், பாம்பு அந்த இடத்தை விட்டு சற்றும் தயக்கமின்றி வடிகால் வழியாக ஓடி மறைந்தது. இந்த வீடியோ Instagram-இல் @palsjat2024 என்ற கணக்கில் பகிரப்பட்டு, மக்கள் இதற்காக வேடிக்கையான கருத்துகளையும் வழங்கி வருகின்றனர்.
View this post on Instagram
“>
ஒரு பயனர் , “புல்லாங்குழல் கேட்டதும் பாம்பு வரும் என்று கேள்விப்பட்டேன், ஆனால் பாம்பு ஓடிப்போகும் காட்சியை lifeலே இப்போதுதான் பார்த்தேன்” என எழுதியுள்ளார். சிலர் இது சிலர் போலியான வீடியோ எனக் கூறினாலும், இந்த நகைச்சுவை கலந்த காட்சி நாள்தோறும் சிரிப்பை தேடி வருவோர் மனதை கவர்ந்துள்ளது என்பது மட்டும் உறுதி.
