உத்திரபிரதேசம் மாநிலம் காசிபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுவாதி(26). கடந்த 2022-ஆம் ஆண்டு சுவாதிக்கு ஜிதேந்தர் என்பருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான நாளிலிருந்து ஜிதேந்தரும் அவரது குடும்பத்தினரும் அதிக வரதட்சணை வாங்கி வருமாறு சுவாதியை அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று அதிக வரதட்சணை வாங்கி வருமாறு ஜிதேந்தர் சுவாதியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் கூர்மையான ஆயுதத்தால் சுவாதியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுவாதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜிதேந்தர், அவரது தாய், தந்தை, சகோதரன் ஆகியோரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
