கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் சிறுவனைத் தவறாகப் பயன்படுத்த முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியில் நடந்து சென்ற பெண் ஒருவர், பால்கனியில் அந்த நபர் சிறுவனுடன் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்து சத்தமிட்டதுடன், அந்தச் செயலைத் தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த நபர் ஏர்பிஎன்பி மூலம் வாடகைக்கு எடுத்திருந்த அந்த வீட்டிற்குள் 4, 7 மற்றும் 15 வயதுடைய மூன்று குழந்தைகள் இருப்பது காவல்துறையினரின் சோதனையில் கண்டறியப்பட்டது. தற்போது அந்த மூன்று குழந்தைகளும் கொலம்பிய குடும்ப நல நிறுவனத்தின் பாதுகாப்பில் உள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு மக்கள் திரண்டதால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க, காவல்துறையினர் மூன்று மணி நேரம் போராடி அந்த நபரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். டெக்சாஸைச் சேர்ந்த அந்த நபர், கடந்த ஜூன் 6-ம் தேதி சுற்றுலாப் பயணியாகக் கொலம்பியாவிற்குள் நுழைந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

“>

 

தற்போது அவர் அரசு வழக்கறிஞர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 14 வயதிற்குட்பட்ட சிறுவனைச் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.