திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் திடீரென தெருநாய் ஒன்று வெறித்தனம் கொண்டு கண்ணில் பட்டவர்களையெல்லாம் ஓட ஓட விரட்டி கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெறிநாய் தாக்குதலில், காக்களூர் பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த நகராட்சி பெண் தூய்மைப் பணியாளர் உட்பட மொத்தம் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நாய் கடித்ததில் நிலைகுலைந்த 3 பெண்கள் உள்ளிட்ட 18 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து 18 பேரை நாய் கடித்துக் குதறிய இந்த பகீர் சம்பவம் திருவள்ளூர் பகுதியில் ஒட்டுமொத்த பொதுமக்களையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளதுடன், சோஷியல் மீடியாவிலும் பயங்கர அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
