தென் தமிழக மாவட்டங்களில் வரும் 11 முதல் 13ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.