தமிழகத்தில் மார்ச்-மே மாதம் வரை கோடை வெயிலானது சுட்டெரிக்கும். இந்நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக மின்தடை அடிக்கடி நிகழும். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மக்கள் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோடைக் காலத்தில் மின்தடை ஏற்படுவதை தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கு முன்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் மின் தேவையை பூர்த்திசெய்ய இந்த ஆண்டு 1,562 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.8.50க்கு வாங்க மின்வாரியத் துறை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியிட்டார். வருகிற ஏப்ரல் மாதம் மின்தேவை 18,500 மெகாவாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். அதனடிப்படையில் மின் தட்டுப்பாட்டை சரிசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் கோடைக்காலத்தில் மின்தடை இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.