உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் பகுதியில் 3 குழந்தைகளின் தாய் 14 வயது சிறுவனுடன் வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய மகனை தேடி அந்த தந்தை பரிதாபமாக அங்கும் இங்கும் அலையும் நிலையில் எப்படியாவது அந்தப் பெண்ணிடம் இருந்து மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்க போலீசிடம் புகார் கொடுத்துள்ளார்.
அதாவது சாத்பா பகுதியில் ஜெய்பால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூனம் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் பூனம் பக்கத்து வீட்டுக்கு அடிக்கடி செல்லும் நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த 14 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில் இருவரும் கடந்த ஜூலை 21ஆம் தேதி சந்தைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளனர். ஆனால் அதன் பிறகு அவர்கள் வீட்டிற்கு திரும்பவில்லை. அப்போதுதான் சிறுவனின் தந்தை ராஜேந்திரனுக்கு உண்மை தெரிய வந்துள்ளது. அவர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ள நிலையில் தன் மகனை பல இடங்களில் தேடி அலைகிறார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
