கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள பஞ்சஷீல் கிரீன்ஸ் 1 குடியிருப்புத் தொகுதியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு உள்ள C1 டவர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை வாக்கிங் அழைத்து சென்றபோது, முகக்கவசம் அணியாத அந்த நாய் திடீரென மேலே ஓடி, படிக்கட்டில் இறங்கிக்கொண்டிருந்த ஒருவரை கடித்தது. தப்ப முயன்ற அந்த நபர், நாயின் தாக்குதலில் காயமடைந்ததாக தெரியவந்தது.
சம்பவத்தைக் கண்ட சாட்சிகள், நாயை உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால் நிலைமை மிக மோசமாக இருக்க வாய்ப்பு இருந்ததாக கூறினர். இதை தொடர்ந்து காயமடைந்த நபர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குடியிருப்பில் வசிக்கும் மக்கள் நாய்களுக்கு கட்டாயமாக முகக்கவசம் மற்றும் கட்டுப்பாட்டு கயிறு பயன்பாடு அமல்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையில், டெல்லி பூத் கலான் பகுதியில் வெறிநாய் கடித்த 6 வயது சிறுமி ஒருவரும் ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டது. இதனால் நாய்கள் மற்றும் தெருநாய்களுக்கு எதிராக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும், மாநகராட்சிப் பொறுப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்புப் பகுதிகளில் நாய்களின் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வும், கட்டாய விதிமுறைகளும் அவசியமாகும் என்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.
ग्रेटर नोएडा वेस्ट की पंचशील ग्रीन्स वन सोसायटी में एक टावर की सीढ़िया से उतर रहे निवासी पर पालतू कुत्ते ने हमला किया। घटना के समय कुत्ते के मुंह पर मजल नही लगा था। कुत्ता की नस्ल जर्मन शेफर्ड है। pic.twitter.com/xoiilir8TK
— Siddharth Agarwal 🇮🇳 (@siddharth2596) July 27, 2025
