பிரேசில் நாட்டில் ‘மனித பார்பி’ என்று புகழ்பெற்ற சமூக வலைதள பிரபலம் பார்பரா ஜன்காவ்ஸ்கி மார்க்வெஸ், கடந்த நவம்பர் மாதம் தனது காதலன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். சுமார் 27 அறுவை சிகிச்சைகள் செய்து தனது தோற்றத்தை பொம்மை போல மாற்றிக்கொண்ட இவர், போதைப்பொருள் பயன்பாட்டால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக முதலில் கூறப்பட்டது.
ஆனால், இவரது உடலில் காயங்கள் இருந்ததால் இது கொலையாக இருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர்.
இதையடுத்து, உண்மையை கண்டறிய சாவ் பாலோ நீதிமன்றம் பார்பராவின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அதன்படி தோண்டி எடுக்கப்பட்ட உடலில், கழுத்து எலும்புகள் முறிந்துள்ளதா மற்றும் நகங்களுக்கு அடியில் ஏதேனும் மரபணு ஆதாரங்கள் உள்ளதா என்று நிபுணர்கள் தீவிரமாக பரிசோதித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் உயர்மட்ட அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், இந்த மறுவிசாரணை பிரேசிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
