அமெரிக்காவின் பெரும் பணக்காரரான ஜெப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, அவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும், அவரது மரணத்தில் ஆரம்பம் முதலே மர்மம் இருப்பதாகப் பலரும் சந்தேகம் எழுப்பி வந்த நிலையில், தற்போது எப்ஸ்டீன் உயிருடன் இருப்பதாக அவரது முன்னாள் காதலி லேடி விக்டோரியா ஹெர்வி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்ஸ்டீன் உண்மையில் இறக்கவில்லை என்றும், அவர் தற்போது இஸ்ரேல் நாட்டில் தலைமறைவாக இருப்பதாகவும் விக்டோரியா தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக, அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ரகசிய ஆவணங்களில் சிறையில் பிணங்கள் மாற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையே, இஸ்ரேல் தலைநகரில் எப்ஸ்டீன் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் தாடியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருவதால், இந்த விவகாரம் உலக அளவில் மீண்டும் ஒரு பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
