காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, இந்தியாவின் அசைக்க முடியாத உறுதியையும் தீர்மானத்தையும் பறைசாற்றுவதாக ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற என்.சி.சி. குடியரசு தின முகாமில் உரையாற்றிய அவர், பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதலானது நமது ஆயுதப் படைகளின் தொழில்முறைத் திறன் மற்றும் இந்திய இளைஞர்களின் தார்மீக வலிமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், இந்த நடவடிக்கையின் போது 75,000-க்கும் மேற்பட்ட என்.சி.சி. கேடட்கள் சிவில் பாதுகாப்பு மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளில் தன்னார்வலர்களாகப் பணியாற்றியதை அவர் வெகுவாகப் பாராட்டினார். “வளர்ந்த இந்தியா 2047” என்ற இலக்கை அடைய இளைஞர்களின் ஒழுக்கமும், அர்ப்பணிப்பும் மிக அவசியம் என்றும், கூறியுள்ளார்.
இந்நிலையில் ராணுவத்தில் சேர விரும்புவோருக்கு என்.சி ஒரு சிறந்த நுழைவு வாயிலாகத் திகழ்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார். ஒட்டுமொத்தத்தில், ஆபரேஷன் சிந்தூர் என்பது இந்திய இறையாண்மையைக் காப்பதில் தேசம் கொண்டுள்ள சமரசமற்ற நிலைப்பாட்டின் அடையாளமாகும்.
