ராஜஸ்தான் மாநிலம்  குமாவாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஷ்யோசந்த் பவேரியா என்ற நபர், கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி சுமார் 25 தெருநாய்களை சுட்டுக் கொன்ற இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ ஆகஸ்ட் 4ஆம் தேதி இணையத்தில் வெளியாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், வெள்ளிக்கிழமை கிராமத்திற்கு திரும்பினார். அதனைத் தொடர்ந்து, அவர் மீது குற்றச்சாட்டு இருந்தும், கிராமவாசிகள் DJ இசை, மலர்கள், லட்டுகள், பிக்அப் வாகன ஊர்வலத்துடன் வரவேற்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரவேற்பு நிகழ்வை தொடர்ந்து விலங்கு நல ஆர்வலர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். “இது குற்றவாளியை பெருமைப்படுத்தும்  செயல். இது போன்ற நடந்தைகள் எதிர்காலத்தில் சட்டவிரோதங்களை ஊக்குவிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

“>

 

ஒரு சமூக வலைதள பயனர், “இன்று நாய்களை கொன்றவர் ஹீரோவாக வரவேற்கப்படுகிறார்… நாளை மனிதர்களை கொன்றாலும் கொண்டாடுவீர்களா?” என கோபமாக பதிவு செய்துள்ளார். ஜுன்ஜுனுவில் உள்ள விலங்கு நல அமைப்புகள், அரசு கோடிக்கணக்கில் விலங்கு பாதுகாப்புக்கு செலவழிக்கும் நிலையில், இப்படியான கொடூர சம்பவங்களை அனுமதிக்க முடியாது என வலியுறுத்தியுள்ளன.

சமூக வலைதளங்களில் தற்போது இந்த வரவேற்பு நிகழ்வை பலரும் விமர்சித்து வருகின்றனர்.