மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலம் பூர்ணியா – அராரியா சாலையில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டார். அவருடன் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவும் இருந்தார்.
பேரணியின் போது, பாதுகாப்பு வளையத்தை தாண்டி ஓடிவந்த ஒருவர், ராகுல் காந்தியின் கழுத்தை பிடித்து, தோளில் முத்தமிட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக தலையிட்ட பாதுகாப்புப் பணியாளர்கள், அந்த நபரை அப்புறப்படுத்தினர். மேலும், அவரை முகத்தில் அறைந்தும் தடுக்கப்பட்ட காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
VIDEO | Voter Adhikar Yatra: A man ran towards Congress MP Rahul Gandhi (@RahulGandhi) to greet him during a bike rally.
(Source: Third Party)
(Full video available on PTI Videos – https://t.co/n147TvqRQz) pic.twitter.com/syb61jPQrL
— Press Trust of India (@PTI_News) August 24, 2025
“>
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ கிளிப்புகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. காங்கிரஸ் தலைவரை நோக்கி விரைந்த அந்த இளைஞர், அவரது இடது தோளில் முத்தமிட, பின்னர் மீண்டும் அவரை நோக்கி நகரும் போது பாதுகாப்புப் பணியாளர்கள் அடித்தது வீடியோவில் தெளிவாக தெரிகிறது.
இருப்பினும், பாதுகாப்பு முறைகளை மீறி, தலைவரை நெருங்கும் சம்பவம் கண்டிப்பாக கவலைக்கிடம் என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
