தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்த பண்டிகையில் பட்டாசு வெடிப்பது முக்கியமான பகுதி. சிலர் சாதாரணமாக வெடுப்பார்கள், ஆனால் சிலர் வித்தியாசமான வகையில் பெரிய பட்டாசுகளை வெடிப்பார்கள். அப்படி ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் வந்துள்ளது. அதில், பாதி மனித உயரம் அளவுள்ள 25 கிலோ எடை கொண்ட பெரிய பட்டாசை வெடுக்கிறார்கள்.
அந்த பட்டாசை பற்றி வைத்ததும், அங்கிருந்த அனைவரும் தூரம் சென்று ஒளிந்து நிற்கின்றனர். ஆனால் பட்டாசு வெடித்ததும், அதில் இருந்து வந்த காகித துண்டுகள் அவர்கள் ஒளிந்த இடம் வரை பறந்து வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தன. இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
