ஒரு தந்தையின் மகள் அவருக்கு இன்னொரு தாய் என்றார்கள்; அந்த மகளுக்கு தந்தையே உலகம். அப்படிப்பட்ட பாசமான பிணைப்பை வெளிப்படுத்தும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், பேச முடியாத தந்தைக்காக மகள் தனது தொழிலில் அவருடன் இணைந்து உதவுகிறார். சிறுமி தன் தந்தையின் குரலாக மாறியிருப்பது பலரது இதயத்தையும் தொட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், தந்தை ஒரு சிறிய வீட்டு அலங்காரக் கடை நடத்துகிறார்; மகள் அவருக்கு வாடிக்கையாளர்களுடன் பேசி சேர்ந்து கடையை நடத்த உதவி செய்கிறார்.

பானிபட் பகுதியில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இந்தக் கடையில் தினமும் தந்தை-மகள் சேர்ந்து உழைப்பது காணப்படுகிறது. அவர்களின் கதை சமூக வலைதளங்களில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

“>

 

வீடியோவை பகிர்ந்த நபர்  தனது பதிவில், “இந்த தந்தையும் மகளும் நடத்தும் கடையில் இருந்து ஏதாவது வாங்குங்கள். உங்கள் சிறிய உதவி அவர்களுக்கு பெரிய ஆதரவாக இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார். வீடியோவில் மகள் வாடிக்கையாளர்கள் கேட்கும் விலையை தந்தையிடம் சைகை மொழியில் விளக்கி, பின்னர் தந்தை அதற்கு பதில் கூறுவது போன்ற காட்சிகள் மனதை நெகிழ வைத்துள்ளன.

இந்த வீடியோ அக்டோபர் 19 ஆம் தேதி பகிரப்பட்டதிலிருந்து ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். “இது உண்மையிலேயே தந்தை-மகள் உறவின் பெருமையை காட்டும் தருணம்,” “அவர்களின் வாழ்க்கை செழிப்பாகட்டும்,” “மகள் தந்தையை பெருமைப்படுத்துகிறாள்” என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நெட்டிசன்கள் அனைவரும் இந்த குடும்பத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த மனதை நெகிழவைக்கும் வீடியோ தற்போது இந்தியா முழுவதும் பரவி வருகிறது