ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம், வீரவாசரம் மண்டலத்திலுள்ள தோகலபூடி கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில், சினிமா காட்சியை ஒத்த வகையில் திருடன் ஒருவர் மிகவும் சுறுசுறுப்பாக பணம் திருடிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சாதாரணமாக உண்டியலை உடைத்து பணம் திருடும் சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. ஆனால் இங்கு, திருடன் ஒருவன் முன்கூட்டியே கொண்டு வந்த மெல்லிதான வயரின் முனையில் பபுள்கம் ஒட்ட வைத்து, அதை உண்டியலுக்குள் நுழைத்து, அதில் உள்ள பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே இழுத்து எடுத்துள்ளார்.
వీరవాసరం మండలం తోకలపూడి వెంకటేశ్వరస్వామి ఆలయంలో హుండీలోని డబ్బులను కాజేస్తున్న దొంగ..
వైర్ కు బబుల్గమ్ అంటించి హుండీ లోని డబ్బులు లాగేస్తున్న దొంగ ..
పలుసార్లు హుండీ లోని డబ్బులు కాజేసిన కేటుగాడు..
అనుమానంతో సిసి కెమేరాలు ఏర్పాటు చేసిన ఆలయ నిర్వాహకులు..
సీసీ కెమెరాలలో… pic.twitter.com/QUUCUeFLk9
— TV9 Telugu (@TV9Telugu) October 21, 2025
“>
இந்த செயலால் பணம் அடிக்கடி மாயமாகிவருவதை கவனித்த கோவில் நிர்வாகம், சந்தேகத்தின் பேரில் சிசிடிவி கேமரா பொருத்தியது. அதன் மூலம் இந்த திருட்டு முறையை அவர்கள் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. “ஓர் கலைஞனை போலவே செயல்பட்ட திருடர்” என நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கியுள்ளன
