உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் பதேஹாபாத் சுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள், தீபாவளி போனஸ் வழங்கப்படாததை எதிர்த்து கடந்த 19ம் தேதி இரவு முதல் 20ம் தேதி காலை வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால், சுங்கச்சாவடியின் கேட்டுகளை திறந்துவிட ஊழியர்கள் முடிவெடுத்ததால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டணமின்றி சென்றது. இதன் காரணமாக மத்திய அரசுக்கு ரூ. பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக, இந்த விரைவுச்சாலை ஆக்ராவையும், லக்னோவையும் இணைப்பதுடன், யமுனா விரைவுச்சாலை வழியாக டெல்லி மற்றும் NCR பகுதிகளுடனும் தொடர்பு கொண்டு வருகிறது.

போனஸ் விவகாரத்தில், கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட ரூ.5,000 அளவிலான போனஸுக்கு பதிலாக, இவ்வாண்டு ரூ.1,100 மட்டுமே வழங்கப்படுவதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளதுடன், அந்த தொகையும் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஸ்ரீ சாய் மற்றும் தாதர் நிறுவனங்களைச் சேர்ந்த 21 பேர், சனிக்கிழமை இரவு சுங்கச்சாவடியை திறந்து, 10 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிறுவன மேலாளர்கள் போனஸை உறுதி செய்யும் வரை சுங்கச்சாவடி இயங்காத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து நிறுவனத்தினர் இதுவரை எந்தவொரு விளக்கமும் வழங்காதது குறிப்பிடத்தக்கது
