கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். “தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ள நிலையில், விஜய்யால் தற்போது 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களைக் கூடச் சொல்ல முடியாது.

ஒரு கட்சிக்கு அடிப்படைத் தேவையான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட எந்தவொரு முறையான கட்டமைப்பும் த.வெ.க-வில் கிடையாது. இது சினிமா அல்ல, அரசியல்” என்று அவர் தெரிவித்தார். மேலும், அதிமுக – பாஜக கூட்டணி குறித்த ஆலோசனைகள் நடந்து வருவதாகவும், அரசியலில் 24 மணிநேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் அவர் சூசகமாகக் குறிப்பிட்டார்.