மத்திய கிழக்குப் பகுதியில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த 23 நாட்களாகத் தீவிரப் போர் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தி வருவதால் அந்தப் பிராந்தியம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்தத் தொடர் மோதல்களால் வளைகுடா நாடுகளில் பாதுகாப்புச் சூழல் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தச் சூழலில், மத்திய கிழக்குப் போரில் சிக்கி இதுவரை 6 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியர் ஒருவர் மாயமாகி இருப்பதாகவும், அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வரவும், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.