சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற திரைப்படங்களை டைரக்டு செய்த ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் “பத்து தல”. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில், சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வருகிற 30ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பத்து தல படத்தின் 2-ஆம் பாடலான நினைவிருக்கா? என்ற பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டு, இப்பாடல் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியாகும் என அறிவித்தது. அதன்படி பத்து தல திரைப்படத்தின் 2-ஆம் பாடல் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் பாடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.