நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கி வரும் இந்த படத்தின் பிஸினஸ் விபரம் வெளியாகி இருக்கிறது. மாவீரன் திரைப்படத்தை சன் தொலைக்காட்சி ரூபாய்.30 கோடி கொடுத்து சாட்டிலைட் உரிமையை கைப்பற்றி உள்ளது. அதேபோன்று ஓடிடி உரிமம் ரூபாய்.35 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. அதோடு ஹிந்தி டப்பிங் உரிமை மற்றும் ஆடியோ உரிமை ரூ.20 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக ரூ. 85 கோடி வரை இந்த படம் பிஸினஸ் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இப்படம் வெளிவருவதற்கு முன்னதாகவே தயாரிப்பாளர் போட்ட பணம் கிடைத்துவிட்டது என்று தெரியவந்து உள்ளது. ரிலீஸ் ஆவதற்கு முன்பு லாபத்தை கொடுத்திருக்கும் மாவீரன் படம் தான் சிவகார்த்திகேயனின் கேரியர் பெஸ்ட் படம் என சொல்லப்படுகிறது. இதன் மூலமாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா ஆகிய நடிகர்களின் மார்க்கெட்டை நெருங்கி வருகிறார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.