2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் அவர்கள் தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும், அவர் கைகாட்டும் நபர்களே சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெறுவார்கள் என்றும் த.வெ.க-வின் செங்கோட்டையன் மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று காலை 10 மணிக்கே, தமிழகத்தை விஜய் தான் ஆளப்போகிறார் என்ற செய்தி உறுதி செய்யப்படும் என்று அவர் நம்பிக்கையோடு பேசியுள்ளார்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என்ற எண்ணத்தோடு தொண்டர்கள் உழைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மற்ற அனைத்துக் கட்சிகளும் டெபாசிட் இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும், த.வெ.க-வின் வெற்றி சரித்திரத்தில் இடம்பெறும் என்றும் அவர் தனது பேச்சில் அனல் பறக்கத் தெரிவித்துள்ளார்.
