அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மற்றொரு மூத்த அமைச்சரான மா.சுப்பிரமணியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களாகத் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

​அமைச்சரின் உடல்நிலை குறித்த தகவலை அறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள், நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நலம் குறித்துக் கேட்டறிய உள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்து இரண்டு முக்கிய அமைச்சர்கள் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது அரசியல் வட்டாரத்திலும், திமுக தொண்டர்களிடையேயும் பெரும் கவலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.