பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்கா, 2026-ஆம் ஆண்டு மனிதகுலத்திற்குப் பெரும் மாற்றங்களையும் சவால்களையும் நிறைந்த ஆண்டாக இருக்கும் என்று கணித்துள்ளார். அவரது கணிப்புகளின்படி, உலக நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றம் அதிகரித்து, அது மூன்றாம் உலகப் போராகவும், அணு ஆயுதப் போராகவும் மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பொருளாதார ரீதியாகப் பெரும் சரிவு ஏற்பட்டு, பணத்தின் மதிப்பு முற்றிலும் குறைந்து, பழைய பண்டமாற்று முறை மீண்டும் வரக்கூடும் என்றும், செயற்கை நுண்ணறிவு மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படத் தொடங்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பாபா வங்காவின் மற்றொரு அதிரடியான கணிப்பு, 2026-இல் வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள் என்பதாகும். இந்த வருகை மனிதர்களுக்குச் சாதகமாக இருக்காது என்றும், அவர்கள் பூமியின் வளங்களைக் கைப்பற்றி மனிதர்களை அடிமைப்படுத்த முயல்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவை அனைத்தும் வெறும் கற்பனையாகத் தோன்றினாலும், தற்போதைய உலக அரசியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அவரது கணிப்புகளைச் சற்று உற்று நோக்க வைக்கின்றன.

பாபா வங்காவின் கணிப்புகள் கடந்த காலங்களில் பலமுறை உண்மையாகியுள்ளதால், இந்த எச்சரிக்கைகள் மக்களிடையே ஒருவித அச்சத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.