தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று கூறுகிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று அமித்ஷா கூறிவிட்டார். அவர் சொல்வது தான் வேத சத்தியம். அவர் சொல்வது போன்று தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் நடைபெறும் என்றார். அவருடைய இந்த கருத்து பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இது தொடர்பாக நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலை தெளிவுபடுத்தினார்.

இது பற்றி அவர் கூறியதாவது, வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததற்கான ஒரே ஒரு நோக்கம் திமுகவை வீட்டுக்கு அனுப்புவதற்காகத்தான். 2026 தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர். இதில் எந்தவிதமான குழப்பமும் கிடையாது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை அறிவித்துவிட்டோம். காமராஜரை விமர்சித்ததால் தற்போது காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடரலாமா வேண்டாமா என்பது குறித்து யோசித்து வருகிறது என்று கூறினார். மேலும் அதிமுகவினர் தனித்து ஆட்சி மற்றும் பாஜகவினர் கூட்டணி ஆட்சி என்று கூறி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.