சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணம், நான்சோங் நகரில் உள்ள ஜியாலிங் ஆற்றின் கரையோரமாகப் பேரா கிளைடிங் (Paragliding) செய்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கட்டுமானப் பணி தற்காலிக டவர் கிரீனில் (Tower Crane) சிக்கிக் கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் உலகளவில் வைரலாகி வருகிறது.

பேரா கிளைடிங்கின் போது பேராசூட்டின் கயிறுகள் கிரீனில் பலமாக மாட்டிக்கொண்டதால், தரையிலிருந்து சுமார் 60 மீட்டர் (கிட்டத்தட்ட 200 அடி) உயரத்தில் அந்த நபர் ஆபத்தான முறையில் நடுவானில் தொங்கியுள்ளார். பகல் நேரத்தில் சிக்கிய அந்த நபர், இரவு வரை பல மணி நேரமாகப் பசியோடும் உயிருக்குப் பயந்தும் அங்கேயே தொங்கிய காட்சிகள் மற்றும் மக்கள் பதறியடித்தபடி வேடிக்கை பார்க்கும் வீடியோக்கள் சீன சமூக வலைத்தளமான ‘வீபோ’-வில் (Weibo) தீயாகப் பரவின.

 

View this post on Instagram

 

A post shared by Explore China (@mychinatrip)

இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் கிரீன் ஊழியர்கள், வான்வழி ஏணி (Aerial ladder) எனப்படும் மிக நீளமான ஏணியைப் பயன்படுத்திப் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அந்த நபரை எவ்வித காயமுமின்றிப் பத்திரமாக மீட்டனர். பார்ப்போரின் மூச்சை உறைய வைக்கும் இந்த ஆபத்தான விபத்து மற்றும் மீட்புப் பணி குறித்த வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.