சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து  திமுக நிர்வாகி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி மீது மோசடி மற்றும் மிரட்டல் உள்ளிட்ட புகார் வந்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்தனர்.

விசாரணைக்காக திமுக நகரத் துணைச் செயலாளர் சண்முகம் என்பவரும் அங்கு வந்திருந்த நிலையில் திடீரென தனுஷ்கோடி அவரை பேப்பர் வெயிட் கல்லால் மண்டையில் தாக்கினார். அவரின் மண்டை உடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் தனுஷ்கோடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.