கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வெல்கம்’ என்ற இந்தித் திரைப்படத்தில், பிரபல நடிகர் அனில் கபூர் ‘மஜ்னு பாய்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்தில் அவர் வரைந்த, கழுதை ஒன்றின் முதுகில் கழுதைப்புலி நிற்பது போன்ற ஒரு விசித்திரமான ஓவியம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது.

 

 

தற்போது அதே ஓவியத்தை நேரில் பார்ப்பது போன்ற ஒரு நிஜக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பண்ணை ஒன்றில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், கழுதை ஒன்றின் முதுகில் ஆடு ஒன்று ஒய்யாரமாக நின்றுகொண்டு, மரத்தின் இலைகளைத் தின்னும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோவை இணையத்தில் வைரல் ஆக்கி சமூக வலைதளவாசிகள், மஜ்னு பாயின் கற்பனை ஓவியத்துடன் இதனை ஒப்பிட்டு நகைச்சுவையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “மஜ்னு பாய் தனது காலத்திற்கு முந்திய ஒரு மாபெரும் தீர்க்கதரிசி மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட கலைஞர்” எனப் பாராட்டி, ரசிகர்கள் கமெண்ட் பக்கங்களை நிரப்பி வருகின்றனர். இந்த வைரல் வீடியோ, பலருக்கும் அந்தத் திரைப்படத்தின் நினைவுகளையும், பழைய நினைவுகளையும் மீண்டும் கிளறிவிட்டுள்ளதுடன் இணையத்தில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.