தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 தொகுதிகளில் மாஸ் வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ரபி – சஹானா என்ற தம்பதி, சிஎம் விஜய்யை நேரில் சந்திப்பதற்காகச் சென்னை நோக்கி வெறித்தனமாக நடைப்பயணம் மேற்கொண்டு வரும் தகவல் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

விஜய் மட்டும் முதலமைச்சர் ஆகவில்லை என்றால் மொட்டை அடிப்பதாகச் சவால்விட்டிருந்த ரபி, தவெக வென்ற மகிழ்ச்சியில் தனது வாழ்நாள் கனவை நனவாக்க மனைவியுடன் வழியெங்கும் கூடாரம் அமைத்துத் தங்கி நடந்து வருகிறார்.

<a href=”http://

 

View this post on Instagram

 

A post shared by RAFI SHAHANA (@mallu_kicks_travel)

“>

தற்போது கழுத்தில் முதல்வர் விஜய் படம், கையில் தவெக கொடி நிறக் குடையுடன் 32 நாட்களில் சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து மதுராந்தகம் அருகே வந்து கொண்டிருக்கும் இந்தத் தம்பதியின் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் சென்னை கோட்டையில் முதலமைச்சர் விஜய்யைச் சந்திப்பார்கள் என்று ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.