தலைநகர் தில்லியில் உள்ள காந்திநகர் மேம்பாலம் அருகே வன்ஷ் சர்மா (23), மோனு(20) என்ற 2 இளைஞர்கள் நேற்று முன்தினம் மொபைல் போனில் குறும்படம் எடுத்து இருக்கின்றனர். இந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வாலிபர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து ரயில் பாதையில் அவர்களது மொபைல் போன்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் கூறியபோது, இவர்கள் இருவரும் தில்லி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மொபைலில் குறும்படங்களை படம் பிடிப்பதற்காக ரயில்வே தண்டவாளத்திற்கு வந்துள்ளனர். அப்போது ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். அவர்களின் மொபைல்களும் தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.