Lic நிறுவனத்தின் முதலீட்டு மதிப்பு இரண்டு மாதங்களில் 50,000 கோடி குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி எல்ஐசியின் மொத்த முதலீட்டு மதிப்பு 83,000 கோடியாக இருந்தது. பிப்ரவரி 22ஆம் தேதியின் கணக்கீட்டின்படி அது 33,000 கோடி கோடியாக வீழ்ந்துள்ளது. அதானி பங்குகளின் கடுமையான சரிவே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இப்போதுவரை அதானியின் எந்த பங்குகளையும் Lic விற்கவில்லை.