சமூக வலைதளங்களில் தற்போது மறைந்த நகைச்சுவை நடிகர் குமரி முத்து அவர்களின் பழைய பேட்டி ஒன்று வைரலாகி, பார்ப்போரின் நெஞ்சை நெகிழ வைத்து வருகிறது. அதில், தனது மகளின் திருமணத்தின்போது தான் சந்தித்த கடுமையான பண நெருக்கடி குறித்து குமரி முத்து பேசியுள்ளார். அந்தச் சமயத்தில் சிலோனில் ஒரு கலை நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தபோது, தமக்குக் கிடைக்கும் 50,000 ரூபாய் திருமணத்திற்கு உதவும் என எண்ணி விவேக்கையும் உடன் அழைத்துள்ளார். அப்போது விவேக் தனக்கு என்ன கிடைக்கும் எனக் கேட்க, 2 லட்சம் ரூபாய் வாங்கித் தருவதாகக் குமரி முத்து கூறியுள்ளார். சொன்னது போலவே நிகழ்ச்சி முடிவில் குமரி முத்துவுக்கு 50 ஆயிரமும், விவேக்கிற்கு 2 லட்சமும் வழங்கப்பட்டது.
கடைசில மனுசன் உடைஞ்சு அழுதாடாப்ல குமரி முத்து 😭 இன்னும் இருந்துருந்தா எத்தனையோ பேருக்கு இன்னும் உதவி செஞ்சுருப்பாரு விவேக் சார் 💔 pic.twitter.com/DWKxvYnhtc
— Akilan Tamilanin Cinema (@TamilaninCinema) March 13, 2026
ஆனால், அந்தப் பணத்தை வாங்கிய அடுத்த நொடியே விவேக் செய்த காரியம் தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தான் வாங்கிய 2 லட்சம் ரூபாயை அப்படியே குமரி முத்துவிடம் நீட்டி, “இதை உங்க மகளோட கல்யாண செலவுக்கு வச்சுக்கங்க” என்று கூறியுள்ளார். இதை எதிர்பார்க்காத குமரி முத்து மேடையிலேயே கதறி அழுதுள்ளார். “கலைவாணருக்குப் பிறகு சிறந்த மனிதர், சிறந்த நடிகர் என்றால் அது விவேக் தான்” என அவர் கண்ணீருடன் கூறும் அந்த வீடியோ இப்போது எக்ஸ் (X) தளத்தில் தீயாய் பரவி வருகிறது. திரையில் சிரிப்பை வாரி வழங்கிய விவேக், நிஜ வாழ்க்கையிலும் ஒரு மாபெரும் வள்ளல் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது!
