12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு ஜெர்மனியில் இலவச செவிலியர் படிப்பையும் வேலையும் வழங்கும் NORCA ROOTS Triple Win Trainee Program (Ausbildung) முதல் தொகுதிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்தத் திட்டம் ஜெர்மன் மொழி பயிற்சி, ஆட்சேர்ப்பு செயல்முறை, ஜெர்மனியின் சுகாதார பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்புகள் மற்றும் ஜெர்மனிக்கு வந்தவுடன் படிக்கும் போது மாதாந்திர உதவித் தொகை ஆகியவை வழங்குகின்றது.

இந்தத் திட்டம் ஜெர்மனியில் பதிவு செய்யப்பட்ட செவிலியராக பயிற்சி பெற தொழில்சார் செவிலியர் பயிற்சியை வழங்குகிறது. உயிரியலை  உள்ளடக்கிய அறிவியல் பாடத்தில் 12ம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://norkaroots.org/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.