கேரள மாநிலம் காசர்கோடு பற்களை பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி இந்திரா. இந்த தம்பதியினருக்கு ரஞ்சேஷ்(34), ராகேஷ்(27) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். நேற்று காலை வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
அப்போது கோபி உள்பட நான்கு பேரும் மயங்கி கிடந்ததை கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது கோபி, இந்திரா ரஞ்சித் ஆகிய மூன்று பேரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராகேஷை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உயிரிழந்த கோபி, இந்திரா, ரஞ்சேஷ் ஆகியோரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடன் சுமையால் கோபி தனது குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
