
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், மன்சூர் அலிகானாக ராமர்கோவிலை நான் வரவேற்க முடியாது. கடந்த கால தவறுகள்… சுதந்திரத்திற்கு அப்புறம் எது எப்படி இருந்துச்சோ, அது அப்படி இருக்கணும். அதுக்கு அடுத்து… அங்க எந்தவிதமான கோவில்களும் இல்லை. உச்ச நீதிமன்றமே சொல்லிருக்கு…. தீர்ப்புகளிலே சொல்லி இருக்கு… ஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கி, ஏகப்பட்ட தவறுகளை அதுல பண்ணி இருக்காங்க. அதற்கு அவசியமே இல்லை. அந்த மாதிரி அரசியல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.
பாகிஸ்தான் பிரிஞ்சதுக்கே நாக்பூரில் அந்த காலத்து ஆர்.எஸ்.எஸ்காரங்க… சாவர்க்கரோ, யாரோ ஒருத்தர் வந்து… இந்து தான் பிரைம் மினிஸ்டரா இருப்பான்…இந்து தான் அப்படி இருப்பான் என சொன்னாரு… அதெல்லாம் பெரிய நீண்ட கதை. நாள் கணக்கா பேச வேண்டியது. அதனால தான் பாகிஸ்தான் பிரிஞ்சு போச்சு. இப்ப மனிதம்குள்ளே அடிச்சுக்கிட்டு என்ன ஆகப்போகுது ? இந்து மக்கள், சகோதரர்கள் கல்லை தெய்வமாக மதிச்சு, தெய்வமாக பூஜை செஞ்சி நமஸ்காரம் பண்ணி அதை வணங்குகின்றோம்.
கல்லிலே கடவுளை பாக்குற நாம், உயிரோடு வாழ்ந்துட்டு இருக்கின்ற மனிதர்களை கடவுளாக பாக்கணும். குழந்தைகள் தான் கடவுள், குழந்தைகள் சிரிப்பே கடவுள்…. அதனால் சகோதரத்துவம், சமத்துவம்… பாஜக மதங்களை வச்சு அரசியல் பண்ணிட்டு இருக்குன்னா… அது மக்கள் பாத்துக்குவாங்க… இப்ப தேர்தல் வந்துட்டு என்பதால் களத்துல இறங்குகின்றோம். எல்லாத்தையும் ஒரே முறையில் சந்திப்போம். மக்கள்கிட்ட கலவரத்தை உண்டு பண்ண கூடாது, அது தான் எங்கள் நோக்கம் என பேசி முடித்தார்.