செய்தியாளர்களிளிடம் பேசிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, மத்திய அரசிடம் தமிழகத்துக்கு நிதியை நீங்கள் முறையா கேளுங்க…  எனக்கு இந்த வருஷத்தில் இருந்து இவ்வளவு கொடுக்காம இருக்கு. எங்க இதுல இருந்து வருவாய் இவ்வளவு வந்திருக்கு உங்களுக்கு…  அதுல வந்து நீங்க வந்து இவ்வளவு தான் கொடுத்து இருக்கீங்க…  எங்களுக்கு கொஞ்சம் கூட குடுங்க.…  எதிர்பார்க்காம இந்த நிகழ்வுகள் எல்லாம் நடந்துருச்சு அப்படின்னு சொல்லி,  நீங்க பக்குவமா பேசி வாங்குவதற்கு உங்களுக்கு திறமை இல்லை.

அதை விட்டுட்டு நீங்க என்ன சொல்றீங்க…  ஒரே வார்த்தை சொல்றீங்க….  மத்திய அரசு கொடுக்கவில்லை அப்படின்னு சொல்றீங்க.  அப்படின்னு சொல்ல கூடாது என்பது என்னுடைய கருத்து.   எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி,  அங்க வந்து யார் இருந்தாலும் சரி, நான் வந்து யாருக்கும் சப்போர்ட் எல்லாம் பண்ணல. நான் பொதுவா சொல்றேன்…  ஒரு முதலமைச்சர் அவரோட கடமை,  அவரை  சுத்தி 8 கோடி மக்கள் இருக்கு…

அரசியல்வாதி சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் மக்களை பாதிக்குது. மக்கள் பாதிக்காத அளவுக்கு உங்களுடைய பேச்சு இருக்கணும்னு நான் விரும்புறேன்.  நீங்க நினைக்கிறீங்க…  ஒருத்தவங்களை கொண்டு வருகின்றோம்…  இவங்கள டக்குனு சி எம் ஆக்கிவிடலாம் என நினைக்கிறீங்க… நீங்க வீட்டில் ஆக்கிக்கலாம். வெளியில அதெல்லாம் முடியாது. நீங்க எல்லாரும் சொல்லலாம்…   படிச்சிட்டோம்.  அதனால இவன் சக்சஸ் புல்லா பண்ணிடுவான் அப்படின்னு சொல்லுவாங்க… அப்படி இல்ல… அரசியல அப்படி இல்லவே இல்லை… நான் பார்த்து இருக்கேன் இல்ல… அரசியல்ல ரொம்ப நிதானம் இருக்கணும்,  யோசிக்கணும்.

அஞ்சு வருஷம்  இருக்க போறோம்னா…  இந்த திட்டங்களை எப்படி கொண்டு போறது ? எப்படி செயல்படுத்துவது ? இதுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் ? என்ன பண்ணனும் ? அப்படிங்கறதில் இருக்கணும்….  சும்மா நீங்க சினிமாவுல நடிக்கிற மாதிரி,  நீங்க ரெண்டு விசில் அடிச்சுட்டு போகலாம்…. உங்க கட்சிக்காரங்க  போகலாம்…..  அது இல்ல அரசாங்கம். நீங்க இப்ப நடத்துறது திமுகவுக்கு நான் வெளிப்படைய சொல்றேன்…  நீங்க அரசாங்கத்தை நடத்தணும்ங்கிற பேர்ல,  உங்க கட்சியை நடத்திக்கிட்டு இருக்கீங்க…  அது தான் நான் சொல்ல முடியும்… அதனால நாம வந்து அடுத்தவங்க மேல குறை சொல்ல கூடாது என பேசி முடித்தார்.