செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், சப்போட்டுக்கு நாங்க யார்கிட்டயும் போக மாட்டோம்.  எங்கள் இதயம் திறந்தே இருக்கின்றன. நாங்கள் எல்லாரையும்  பார்க்க இருக்கிறோம். எங்களுடைய குழுவினர் சந்திக்க இருக்காங்க. அதனால யாரையும் நான் தாழ்த்தியோ,  உயர்த்தியோ,  சிறுமைப்படுத்த முடியாது.  கூட்டணி எது அமையுதோ,  அவர்கள் கூட நாங்கள் பயணிப்போம்.

இப்போ இருக்கிற படங்கள் எனக்கு வருகின்றதை  நடிக்கலாம். ஆனால் தீவிரமாக இறங்கின பிறகு,  நம்ம அதுல இறங்குவது எப்படி சாத்தியம் என்று தெரியல…..   இப்போ முன்னெடுத்தாச்சு,   கால் வச்சாச்சு…  இறுதி நாட்கள்,   எத்தனை வருஷம் இருக்க போறோமோ,  தெரியாது…  வாழ்ந்த நாட்கள் அதிகம். வாழ போற நாட்களோ ரொம்ப குறைவு. உண்மையாகவே முழுக்க முழுக்க நாட்டுக்காக எங்களை நாங்கள் அர்ப்பணித்துக் கொள்ள ஆயத்தமாகி இருக்கின்றோம்.  உங்களுடைய ஆதரவு வேண்டும் நன்றி..

ஓட்டு கேட்க  போறீங்க… நீங்க ஏன் இப்படி கும்பிடுற மாதிரி  போடல ? திரிஷா கூட இருந்த படத்தையே ஏன் போட்டு இருக்கீங்க என இழுக்குறார்.  அவரே இழுக்கின்றார். நான் என்னபா பண்றது ? பதில் சொல்ல விடுங்க….  நான் நானாக இருக்க விரும்புறேன்.  நான் கோமணம் கட்டிக்கிட்டு, காலையில்  வயக்காட்டில் இருந்தாலும்,  நான் எப்படி இருப்பனோ….  அப்படித்தான் இருப்பேன். ராத்திரியில லுங்கி கட்டிக்கிட்டு படுத்து தூங்குவேன், இல்லையா ?  வேலை செய்யும்போது அதற்கேற்ற உடைகளை உடுத்தி இருப்போம். அந்த வெள்ளாடை அணிந்துதான் அரசியலில்  இருக்கணும்னு அவசியம் இல்லை,  மக்களுக்கு தெரியும் என பேசினார்.