ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கே.வி.பி.புரம் மண்டலத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர் மற்றும் அவரது மாமியார் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல், ஒரு இளம்பெண் மீது கொலை முயற்சியாக மாறிய பரபரப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர், 15 வயது சிறுமியை காதலித்து, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு அந்த பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். இளம் தம்பதியுடன் சிறுமியின் 40 வயது தாயார் (மாமியார்) ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறுமி வீட்டில் இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இது பற்றி சிறுமிக்கு தெரிந்ததால் அவர் தன்னுடைய கணவன் மற்றும் தாயாரை கண்டித்ததோடு கடும் வேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாமியார் தன்னுடைய மருமகனை வீட்டில் வைத்து திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இதனை 15 வயது சிறுமி தடுக்க முயன்றதால் சிறுமியை அவரது தாயாரும் கணவனும் சேர்ந்து கடுமையாக தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து அவரை மீட்டதோடு மாமியார் மற்றும் மருமகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.