நாகாலாந்தைச் சேர்ந்த ஒருவரால் நடுத்தர வயதுடைய ஒரு நபர், நாய்க்கு வலுக்கட்டாயமாக பீர் (மதுபானம்) கொடுக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ சமூகத்தில் கடும் கண்டனங்களை கிளப்பியுள்ளது. வீடியோவில், அந்த நபர் நாயின் வாயை பிடித்து வலுக்கட்டாயமாக அதன் தொண்டையில் பீர் ஊற்றுகிறார். நாய் பதற்றமடைந்து போராடும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. மதுவின் சுவையால் வாந்தி எடுக்கும் நிலையில் நாய் காணப்படுகிறது.

இந்த வீடியோ வைரலானதையடுத்து, பல சமூக ஊடக பயனர்கள் மற்றும் விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் அந்த நபரின் செயலை மனிதாபிமானமற்றது, கொடூரமானது என கடுமையாக கண்டித்துள்ளனர். அவருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக இதுவரை எந்தவிதமான கைது அல்லது அதிகாரப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் நாகாலாந்தில், விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் தெருநாய்கள் உள்ளிட்ட விலங்குகளை துன்புறுத்துவதற்கு எதிராக முன்னர் கோஹிமா நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.