மும்பையில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிய 40 வயது பெண், தனது 16 வயது மாணவனை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று, மது அருந்த வைத்த பிறகு, பாலியல் உறவில் ஈடுபட்டதாக மாணவனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவர்மீது போக்சோ சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாணவர் 16 வயதுக்கு மேல் என்பதால், ஆசிரியைக்கு சிறப்பு போக்சோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஆசிரியை சார்ந்த ஜாமீன் மனுவில், மாணவன் தன்னை “மனைவி” என அழைத்துள்ளார் என்றும், தன்னை உணர்ச்சி ரீதியாக நேசித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் தனது பெயரை உடலில் பச்சைக் குத்தியதாகவும், காதல் குறிப்பு நோட்டுகள் அனுப்பியதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எல்லாம் சம்மதத்துடனே நடந்தது ஆசிரியை, ஏப்ரல் 2024ல் பள்ளியிலிருந்து ராஜினாமா செய்ததையும், மாணவனைத் தன்னுடைய தாயின் அனுமதியுடன் மட்டுமே சந்திப்பதாக வலியுறுத்தியதையும், ஆனால் மாணவனே தொடர்ந்து தொடர்பு கொண்டதாகவும் கூறியுள்ளார்.
FIR-னில், 2024 ஜனவரி முதல் 2025 பிப்ரவரி வரை, ஆசிரியை பல்வேறு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், காரிலும் மாணவனுடன் உடலுறவு கொண்டதாகக் கூறப்படுகிறது. மாணவனுக்கு மது மற்றும் மருந்து வழங்கப்பட்டதாகவும், ஒரு பெண் சக ஆசிரியையை வைத்து சந்திக்க வற்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு உள்ளதால், இது மாணவர் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் 11ஆம் வகுப்பு முடித்த பிறகு பள்ளியை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவில், ஆசிரியை சிறையில் வைத்திருப்பது பயனற்றது என்றும், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதையும், அதில் ஒருவருக்கு சுவாசக் கோளாறு இருப்பதால், அவருடைய சிறைவாசம் குடும்பத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் நீதிபதி சபீனா மாலிக் தெரிவித்தார். இதன் அடிப்படையில் ₹50,000 தனிப்பட்ட பிணை மற்றும் பிணையாளர்களுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவனையோ அல்லது சாட்சிகளையோ தொடர்புகொள்ளக் கூடாது, நீதிமன்ற அனுமதி இல்லாமல் மும்பையை விட்டு செல்லக்கூடாது எனவும், எந்தவொரு நிபந்தனையையும் மீறினால் ஜாமீனை ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
