டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றிய பாஜக, பருவமழை மேலாண்மை திட்டங்களில் தங்களை சிறப்பாகவே செயல்பட்டுள்ளதாக விளம்பரமிட்டது. இதற்கிடையே, பட்பர்கஞ்ச் தொகுதி எம்எல்ஏ ரவீந்தர் சிங் நேகி, “எங்கள் ஆட்சியில் ஒரு இடத்திலாவது தண்ணீர் தேங்கி இருந்தால் காட்டுங்கள்” என்று மக்கள் மத்தியில் சவால் விட்டார். ஆனால் அதே சாலையில், கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதும், நெட்டிசன்கள் நீந்தும் வீடியோக்கள் வைரலாக பரவி, அவரது பேச்சு மிகுந்த நையாண்டியாகி விட்டது.
வியாழக்கிழமை காலை பெய்த கனமழையால், தலைநகர் முழுவதும் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. முக்கியமான சாலைகள் எல்லாம் தண்ணீரில் மூழ்க, பொதுமக்கள் அலுவலக நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்க வேண்டிய நிலை உருவானது. ஐடிஓ, நேரு பிளேஸ், மெஹ்ராலி-குர்கான் சாலை, கைலாஷ் காலனி போன்ற பகுதிகளில் மக்கள் நடந்து செல்லவும் சிரமப்பட்டனர். வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
स्विमिंग पूल बन गई दिल्ली की सड़कें।
स्थान : पटपडगंज, दिल्ली#DelhiRains #Delhi #DelhiCM pic.twitter.com/wZj0VpISpe— Ajit Singh Rathi (@AjitSinghRathi) July 23, 2025
“>
இந்த நிலையில், ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் சமூக வலைதளங்களில் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் நீந்தும், படகு போல் தொட்டியில் செல்வது போன்ற வீடியோக்களை பகிர்ந்தனர். முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சவுரப் பரத்வாஜ், எம்எல்ஏ அதிஷி உள்ளிட்டோர் பாஜகவை கடுமையாக சாடினர். “வழிகாட்டும் திட்டமிடல் இல்லாமல், பாஜக வெறும் பேச்சுக்காரர்களாகவே இருப்பது இந்த நிலைமையால் நிரூபிக்கப்பட்டுள்ளது” என கருத்துகள் எழுந்தன.
काश ये नाव सरकारी होती तो वाले आज वेनिश के मज़े यही दिल्ली के लोग यहीं पर ले रहे होते।
रेखा गुप्ता जी को एक धन्यवाद तो बनता है उन्होंने दिल्ली को वेनिश बना दिया है।#Delhi #rain #delhirain #india #venice pic.twitter.com/MLRNdo734R— Singh is here (@Singhhagain) July 23, 2025
“>
இதற்குப் பதிலளித்த எம்எல்ஏ ரவீந்தர் நேகி, “மழை கனமாக பெய்ததால் தண்ணீர் தேங்கியது. நாங்கள் நான்கு மாதங்களுக்கு முன்தான் ஆட்சிக்கு வந்தோம். முந்தைய அரசு 12 ஆண்டுகளாக ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்” என தற்காப்புக் கருத்து தெரிவித்தார். ஆனால், வானிலை துறை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மேலும் மழை பெய்யும் அபாயம் நிலவுவதால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர்.
