தைவானில் உள்ள பிரபலமான தேசிய தைவான் நார்மல் பல்கலைக்கழகத்தில் (NTNU) பயிலும் மாணவிகள், ஒரு அதிர்ச்சி சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர். அவர்கள் தெரிவித்ததாவது, சாத்தியமான கிரெடிட் மதிப்பெண்களை பெற வேண்டும் என்றே, அந்த யூனிவர்சிட்டியின் பெண் கால்பந்து பயிற்சியாளர் ‘ஜோவ் தை-யிங்’ மாணவிகளை பலமுறை கட்டாயமாக ரத்ததானம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறுகின்றனர். மேலும், ஒரு மாணவி மட்டும் தானே தனது பயில்நேரத்தில் 200 முறை ரத்தம் கொடுக்கவைக்கப்பட்டதாக கூறியதால், இந்த சம்பவம் சர்வதேச அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 நாட்கள் தொடர்ச்சியாக, தினமும் மூன்று முறை ரத்தம் எடுத்ததாக மாணவி ஜியான் தெரிவித்துள்ளார். “கிரெடிட் மதிப்பெண்கள் தேவைப்படுகிறதற்காக, என் உடலிலிருந்து தினமும் அதிகளவில் ரத்தம் எடுக்கப்பட்டது. எட்டாவது நாளில், என் கை முழுக்க எந்த நரம்பும் மீதமில்லாமல் இருந்தது” என அவர் வேதனையுடன் கூறியுள்ளார். மேலும், இந்த ரத்ததானம் செய்ய மறுத்த மாணவர்கள் சிலருக்கு டிகிரி வழங்க மறுப்பு, சிலருக்கு விலக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 61 வயதான பயிற்சியாளர் ஜோவ் தை-யிங், கடந்த ஜூலை 13ஆம் தேதி, பல்கலைக்கழகத்தால் அதிகாரபூர்வமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மன்னிப்பு கோரிய அறிக்கையும் வெளியிடப்பட்டது. ஆனால் பின்னர், பல்கலைக்கழகம் அந்த அறிவிப்பை தங்களது இணையதளத்திலிருந்து அகற்றியது. தற்போது, மேலும் பல மாணவிகள் மௌனத்தை உடைத்து இதேபோன்ற வலிமிக்க சம்பவங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சம்பவம், மாணவர்களின் சுய உரிமைகளை பாதுகாக்கும் விதமாக தைவானில் புதிய விவாதங்களை தூண்டியுள்ளது.
